குஜராத்தில் 2001ஆம் ஆண்டில் இருந்து, 2014ஆம் ஆண்டு வரை சுமார் 13 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர், நரேந்திர மோடி. பின்னர், 2014ஆம் ஆண்டில் இருந்து தற்போது 9 ஆண்டுகளாக பிரதமராக செயல்பட்டு வருகிறார். பாஜகவில் அதிக நாள்கள் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெருமையை பெற்ற நரேந்திர மோடி, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
தற்போது 72 வயதான பிரதமர் மோடி, 2029 மக்களவை தேர்தல் வரை தீவிர அரசியலில் இருப்பார் என கூறப்படுகிறது. இதனால், அவருக்கு பின் பாஜகவில் செல்வாக்கு செலுத்தி, பிரதமர் பதவியை கைப்பற்றப்போவது யார் என்ற கேள்வி இப்போதே எழுந்துவிட்டது என்பதுதான் நிதர்சனம். மோடி – ஷா கூட்டணியில், அமித் ஷா எப்போதும் தன்னை ஒரு மறைமுக வீரராகவே தன்னை வெளிக்காட்டி வருகிறார்.
இதனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து பிரதமராகும் வாய்ப்பு, தற்போது உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத்திற்குதான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதில் அவரின் நிலைப்பாடு குறித்து யோகியே கருத்து தெரிவித்துள்ளார்.
நான் எந்த பதவிக்கும் போட்டியிட இல்லை. மாநில அளவில் மட்டுமே இருக்க விரும்புகிறேன். எனக்கு எந்த பதவி மீதும் ஆசை இல்லை. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மிகப்பெரிய பலம். பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டிற்கு புதிய அடையாளம் உருவாக்கப்பட்டது.
மோடி அரசின் கொள்கைகளால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் பயனடைந்துள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியுள்ளது. இந்த பணிகளுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். 2019 தேர்தலை காட்டிலும் 2024இல் உத்தரப் பிரதேசம் பாஜகவுக்கு அதிக இடங்களை வழங்கும். 2024 தேர்தலில் பாஜக தனித்து 300 முதல் 315 இடங்களைப் பெறும்” என்றார்.
சனாதன தர்மம் குறித்த கேள்விக்கு,”சனாதன தர்மம் இந்தியாவின் ஆன்மா, அடையாளம். சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் ஆகும்.நான் மென்மையான இந்துவும் இல்லை, மிக கடினமான இந்துவும் இல்லை. இந்துத்துவா ஒருபோதும் கடினமானது அல்லது மென்மையானது அல்ல. அது வெறும் இந்துத்துவா மட்டுமே” என பதிலளித்தார்.
ராம்சரித்மனாஸ் தொடர்பான சர்ச்சைகள் குறித்து பேசிய அவர், “வளர்ச்சியில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த விவகாரம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமூகத்தில் நல்லிணக்கத்தை பரப்புபவர்கள் அவர்களின் உண்மை முகதத்தை மக்கள் புரிந்துகொள்வதால் வெற்றி பெற மாட்டார்கள்” என்றார்.
மேலும் படிக்க | சென்னை நிறுவன சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி… பலருக்கும் பறிபோனது பார்வை