ஸ்டெர்லைட் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த சீமான்.!

சென்னை மெரினாவில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி செலவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான்
எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மேலும் இதனால், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும், மக்கள் வரிப்பணத்தில் ஏற்கனவே மெரினாவை சுடுகாடாக்கி நினைவிடங்களை கட்டிவிட்டீர்கள், மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விஷயங்களை முன்வைத்து சீமான் எதிர்ப்பை காட்டி வருகிறார்.

இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதை குறித்து, திருவல்லிக்கேணியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலில் பேனா சிலையை வைத்தால் உடைப்பேன் என கூறியது சமூகவலைதளங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து சீமானுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். சீமான் சிலையை உடைக்கும் வரையில் எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டு இருக்குமா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார். இந்தநிலையில் கலைஞரின் பேனா சிலைக்கு கொந்தளித்த சீமான், ஸ்டெர்லைட் வழக்கில் அந்தர் பல்டி அடித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தான் சொல்லவில்லை என நீதிபதி அருணா ஜெகதீசன் குழுவிடம் தெரிவித்ததாக மக்கள் கலை இலக்கிய கழக (மகஇக) முன்னாள் செயலாளர் மருதையன் டிவீட் செய்தார். இதையடுத்து, ஆணையத்திடம் சீமான் அப்படிக் கூறவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

2018, மே 22ம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிர் இழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அவ்வாணையம், கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி தனது விசாரணை அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. சுமார் 3,000 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கை 4 பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் இரண்டாவது பாகத்தில், 210 மற்றும் 211வது பக்கத்தில் (Point No. 239) சீமான் கூறியது இடம் பெற்றுள்ளது. அதில், “இப்போது எதார்த்தமாக எழும் கேள்வி என்ன வென்றால். தனியார் மற்றும் பொதுச் சொத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பா? என்ற கேள்வி எதார்த்தமாக எழுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இப்போராட்டம் குறித்துக் கேட்கப்பட்டது.

தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதில் சிலருக்குக் காயங்களும் ஏற்பட்டது. ஆனால், நான் சொல்லி எனது கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டும் இல்லாமல், அவர்கள் அப்பகுதியில் மக்களுடன் மக்களாக இருப்பதால் தன்னிச்சையாகவும் தன்முனைப்புடனும் கலந்து கொண்டனர்” எனக் கூறியுள்ளார்.

உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய சீமான்:அரவணைத்து ஆறுதல் கூறிய சகோதரி!

அதாவது, தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் சொல்லி போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களாகவே தன்னிச்சையாகக் கலந்து கொண்டனர் எனச் சீமான் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். கலைஞர் விஷயத்தில் பொங்கிய சீமான், மக்கள் போராட்டத்தில் பல்டி அடித்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறிவருகின்றனர்.

‘‘தமிழர்களை கொச்சைப்படுத்திய நடிகர் ஜெயராம் வீட்டை அடித்து ஒடைத்த போது, எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என கூறி முன்ஜாமின் கேட்டதோடு, அப்போது கட்சியில் சென்னை மாவட்ட பொறுப்பாளராக இருந்த அதியமானை கட்சியை விட்டு நீக்கிய வீரசாவக்கர் இல்லையா சீமான்’’ என அவரது எதிர்ப்பாளர்கள் கூறிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.