Dancer Ramesh death: பயங்கரமா அடிச்சார்… டான்சர் ரமேஷ் சாகுறதுக்கு முன்னாடி நடந்தது இதான்.. கதறும் இன்பவள்ளி!

டான்சர் ரமேஷ் இறப்பதற்கு முன்பாக நடந்தது என்ன என்பது குறித்து கண்ணீர்மல்க பேசியுள்ளார் இன்பவள்ளி.

டான்ஸர் ரமேஷ்ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் டான்சர் ரமேஷ். மைக்கேல் ஜாக்ஸன் ஸ்டைலில் அவர் போடும் ஸ்டெப்புக்கு என பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த நிகழ்ச்சியின் நடுவர்களான பாபா பாஸ்கர், சினேகா, சங்கீதா ஆகியோரும் அவருக்கு பெரும் ஃபேனாக இருந்தனர். டான்சர் ரமேஷ் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ​ Leo: விஜய் கூட மல்லுக்கட்ட இத்தனை கோடிகளா? லியோ படத்திற்கு சஞ்சய் தத் வாங்கும் சம்பளம்!​
பிறந்தநாளில் சோகம்இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார் டான்ஸர் ரமேஷ். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தனது பிறந்த நாளில் தனது இரண்டாவது மனைவியான இன்பவள்ளியுடன் புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
​ AK 62: காத்திருந்து… காத்திருந்து… கடைசியில் ஏமாந்து வெளியேறிய விக்னேஷ் சிவன்… கலங்கும் ரசிகர்கள்!​
20 வருஷத்துக்கு முன்பே காதல்ஆனால் டான்சர் ரமேஷின் முதல் மனைவியான சித்ரா, இன்பவள்ளிதான் தனது கணவரை கொலை செய்து விட்டார் என போலீஸில் புகார் அளித்தார். மேலும் இன்பவள்ளி, தனது கணவரை அடித்து துன்புறுத்திய வீடியோவையும் வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டான்சர் ரமேஷ் மரணமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில் இன்பவள்ளி, ரமேஷ் இறக்கும் முன்பு வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர் தனக்கும் ரமேஷுக்கும் 20 வருஷத்துக்கு முன்னாடியே காதல் மலர்ந்ததாக கூறியுள்ளார் இன்பவள்ளி.
​ Samantha: 30 கிலோ புடவை… 3 கோடி ரூபாய் மதிப்பில் நகை… சகுந்தலம் படத்திற்காக ரிஸ்க் எடுத்த சமந்தா!​
பயங்கரமாக அடித்தார்3 வருஷத்துக்கு முன்னாடி தனது கணவர் மாரடைப்பால் மரணமடைத்தால் தனது 3 மகள்களோடு தனியாக இருந்த தனக்கு ரமேஷ்தான் பாதுகாப்பா இருந்தார் என கூறியுள்ளார். மேலும் ரமேஷ் ஒரு நாளும் தனது மகள்களிடம் மரியாதை குறைவா நடந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு அவருடைய பிறந்த நாள் என்பதால் அன்று சர்ச்சுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு குடிக்க பணம் கேட்டதாகவும் கொடுக்காததால் தன்னை பயங்கரமாக அடித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
​ Samantha: என்னலாமோ நடந்துருச்சு… தனக்குத்தானே ஆறுதல் கூறிக்கொள்ளும் சமந்தா.. கலங்கும் ரசிகர்கள்!​
பக்கத்து ரூமில் இருந்தேன்..ரமேஷ் தன்னை அடித்ததால் தான் தனது மகளுடன் பக்கத்து ரூமுக்குள் சென்றுவிட்டதாகவும் பின்னர் எந்த சத்தமும் இல்லாததால் தனது மகளை சென்று பார்க்க கூறிதாகவும் அப்போது ரமேஷ் கீழே விழுந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போதுதான் அவர் கீழே குதித்துவிட்டார் என்பது தெரிந்தது என்றும் பின்னர் அழுதப்படியே போலீசாருக்கு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார் இன்பவள்ளி. மேலும் குடிக்க பணம் கொடுத்திருந்தால் ரமேஷ் இன்று தன்னோடு இருந்திருப்பார் என்றும் ரமேஷ்தான் தனது உயிர் என்றும் அவர் இல்லாமல் இனி எப்படி வாழப்போகிறேன் என்று தெரியவில்லை என்றும் கண்ணீர் மல்க பேசியுள்ளார் இன்பவள்ளி.
​ Barathi Kannamma: முடிவுக்கு வந்த பாரதிகண்ணம்மா… கண்ணீருடன் ஃபேர்வெல் கொண்டாடிய சீரியல் டீம்!​
Dancer Ramesh

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.