ஓபிஎஸ் ஒரு புற்றுநோய்: ராஜன் செல்லப்பா தாக்கு!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி
பக்கம் துணை நிற்பது குறித்து நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தென்னரசுவை வெற்றி பெற செய்ய கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. திமுகவை வலிமையுடன் எதிர்க்கக்கூடிய சக்தி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியிடம் மட்டுமே உள்ளது. இன்றைக்கு சிலர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தங்களுக்கு ஏற்றவாறு வலைத்திருக்கிறார்கள். நிரந்தர பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். உச்சநீதிமன்றத்தில் நிரந்தர தீர்ப்பு இன்னும் வழங்கவில்லை. இடைத்தேர்தலுக்காக இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. சிலர் “கீழ விழுந்தும் மீசையில் மண்ணு ஒட்டல.” கதைதான். மிகப்பெரிய இழப்பை இழந்துவிட்டார்கள். தேர்தல் ஆணையம் இன்னும் இடைக்கால பொது செயலாளர் பதவி இல்லை என அங்கீகரிக்கவில்லை.” என்றார்.

எடப்பாடி பழனிசாமி காரியங்களை மிகச் சிறப்பாக ஆற்ற கூடியவர். வெற்றியை தவறாக கொண்டாடுவதில்லை. திமுகவை வீழ்த்த எங்களுக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பு இது. அதிமுக என்பது பொதுகுழுவினால் தொண்டர்களால் தேர்தெடுக்கப்பட்ட உச்சப்பட்ச பதவி. இரட்டை இலை சின்னத்தை யார் வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். ஆனால் நாங்கள் ஆதரிப்பது எடப்பாடி பழனிசாமியைத்தான் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

அதிமுகவின் முழுமையான எதிரி திமுக; திமுகவிற்கு அதிமுக எதிரி என்ற அவர், “திமுக வேறு, அதிமுக வேறு. அவர்களுக்கு அதிமுகவை விமர்சனம் செய்ய தகுதி இல்லை. அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் ஆடலாமே தவிர அதிமுகவிற்குள் சிலம்பம் ஆட தேவையில்லை. எங்களுக்கு சிறப்புக்குரிய தலைமை எடப்பாடி பழனிசாமி.” என்றார்.

எடப்பாடி எனும் மிகப்பெரிய ராஜதந்திரி தங்களிடம் உள்ளதாக தெரிவித்த ராஜன் செல்லப்பா, “எங்களிடம் சரியான தலைமை உள்ளது. பலர் பலர் கணக்கு போடுவார்கள் சிலர் கூட்டு சேர்ந்தால் வாக்குகள் கூடும் சிலர் கூட்டு சேர்ந்தால் மைனஸ் ஆகும். நாங்கள் மைனஸ் ஆக விரும்பவில்லை. சரியில்லாத தலைமையை கூட்டு சேர்த்துக் கொண்டால் உடலில் புற்றுநோய் வருவது போல அதை கட்சிக்குள் அனுமதிப்பதில்லை.” என்று ஓபிஎஸ்சை மறைமுகமாக சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் எங்களுக்கு முதல் வெற்றிப்படியாக இருக்கும். திமுக அதிகார பலத்தை பண பலத்தை காட்டுவார்கள். அதை எதிர்கொள்ள அதிமுகவிற்கு முழு தைரியம் உள்ளது. போலி வாக்காளர்கள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறி உள்ளார். திமுக வன்முறையையில் ஈடுபடும் போது, அதிமுக தேர்தல் ஆணையத்திடம் சரியான நேரத்தில் அதனை எடுத்துக்காட்டும். மத்திய தேர்தல் ஆணையமே காலம் தாழ்த்தியதால் இன்றைக்கு சரியான தீர்ப்பு வழங்கப்படவில்லை இடைத்தேர்தலில் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சின்னத்தை முடக்கவது தொடர்பாக யாரும் வழக்கு போடவில்லை. பொதுகுழுவில் ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுசெயலாளர் இபிஎஸ்தான் என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம்.”என்றார்.

கருணாநிதி பேனா சின்னம் பற்றி பேசிய ராஜன் செல்லப்பா, “நினைவு சின்னம் அல்லது சிலை வைப்பதை யாரும் தடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி மிகப்பெரிய எழுத்தாளர் தான். ஆனால் அவரைப் போன்று எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் இன்றைக்குள்ள பொருளாதார பற்றாக்குறையை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். பேனா வைப்பதற்கு ஓபிஎஸ் கூட சம்மதம் தெரிவித்திருக்கிறார். எதன் அடிப்படையில் சம்மதம் தெரிவித்தார்? அவரது சுயலாபத்திற்காகவா?” என கேள்வி எழுப்பினார்.

சசிகலா
எதற்காக பேச்சுவார்த்தைக்கு வரப் போகிறார்? அவர் வாக்காளராக எடப்பாடிக்கு கூட வாக்களிக்க வரலாம்; அவர் கட்சியில் கிடையாது. அவர் சாதாரண மக்களாக வாக்காளராக அதிமுகவில் இணைந்து பயணிக்கலாம். எங்களை பொறுத்தவரை அதிமுகவிற்கும் கட்சிக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் சசிகலாவிடம் இல்லை என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.