ரஷ்யாவில் பெரிதும் போற்றப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு: சாம்பலாக்கி வீடியோ வெளியிட்ட உக்ரைன்


ரஷ்யாவின் மிக அரிதான Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

உக்ரைன் படை அதிரடி

கடந்த பிப்ரவரி 3ம் திகதி உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் ரஷ்யாhttps://ibctamil.com/article/world-ukrainian-president-says-war-getting-worse-1675576368வின் Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உக்ரைனின் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

உக்ரைனில் இராணுவ ட்ரோன்கள் மூலம் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சிகளில், ரஷ்யாவின் Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை முதலில் உக்ரைனிய படைகள் தாக்கியதை காட்டுகிறது, பிறகு பற்றிய தீயை ரஷ்ய வீரர்கள் அணைக்க முயற்சிக்கும் போது ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் அருகில் உக்ரைனிய வீரர்கள் மீண்டும் தாக்குகின்றனர்.

அப்போது அதில் சில ரஷ்ய வீரர்கள் தாக்கப்படுவது துல்லியமாக பார்க்க முடிகிறது, இதில் அவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.


பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட கருத்து

ரஷ்யாவின் இந்த Tor-M2DT ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு போரில் உக்ரைனுக்கு முதன்முதலில் அனுப்பப்பட்ட போது, ரஷ்ய தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய நட்சத்திரமாக போற்றப்பட்டது.

ஆனால் உக்ரைனிய ட்ரோன்கள் அவர்களுக்கு எங்களது துப்பாக்கிதாரிகளை அறிமுகப்படுத்தி அதை பிரகாசமாக ஒளிரச் செய்துள்ளனர். அத்துடன் தீயணைப்பான்கள் இதில் உதவி செய்யாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யாவில் பெரிதும் போற்றப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு: சாம்பலாக்கி வீடியோ வெளியிட்ட உக்ரைன் | Ukraine Destroys Russia S Tor M2Dt Defense System

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு உக்ரைனில் தகர்க்கப்பட்டது தொடர்பான முதல் ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கை இதுவாகும், உக்ரைன் ஆயுத கண்காணிப்பு ஆய்வாளர்கள் வெளியிட்ட குறிப்பில், இது முக்கியமாக ஆர்டிக் சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.