வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்,: அமெரிக்காவில் பழமைவாய்ந்த சட்ட பத்திரிகையின் தலைவர் பதவிக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா அய்யர், 29, என்ற பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் ஒரு பகுதியாக, 1887ம் ஆண்டு துவக்கப்பட்ட ஹார்வர்ட் சட்டப் பத்திரிகை, சட்டம் பயிலும் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த தகவல்களை அளித்து வருகிறது.
![]() |
உலகம் முழுதும் மிகப் பிரபலமான இப்பத்திரிகையின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அப்சரா அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பத்திரிகையின், 136 ஆண்டு கால வரலாற்றில் இந்திய பெண் ஒருவர், அதன் தலைவராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை.
அப்சரா, அமெரிக்காவில் உள்ள சட்டக் கல்லுாரியில் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். தொல்லியல் மற்றும் பழங்குடி சமூகம் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக, ஆக்ஸ்போர்டு பல்கலையில் எம்.பில்., படிப்பை முடித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement