திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; தனியார் பஸ் நடத்துனர்.
இவர் நடத்துனராக பணியாற்றும் தனியார் பஸ் நேற்று முன்தினம் மதியம் 3:30 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் போது, தமிழகப் பகுதியான கொண்டலாங்குப்பம் கிராமத்தில் சிலர் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, நடத்துனர் கார்த்திகேயன், வழிவிட்டு பேசும்படி கூறியுள்ளார். இதனால், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பஸ் திண்டிவனத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் புதுச்சேரி நோக்கி வந்தபோது, மாலை 5:30 மணிக்கு சந்தை புதுக்குப்பம் நான்கு முனை சாலை சந்திப்பில், அப்பகுதி காலனியை சேர்ந்த துரைசிங்கம் மகன் ராஜசேகர், 28; சின்னரெட்டி மகன் ராஜாராம், 36; ஆறுமுகம் மகன் ஆளவந்தான், 21; காசி மகன் திலிப், 21; ஆகியோர் பஸ்சை நிறுத்தி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, நான்கு பேரும் கையில் வைத்திருந்த உருட்டு கட்டை மற்றும் செங்கற்களால் கார்த்திகேயன் மற்றும் டிரைவர் ராஜா ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement