அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே?.. ராகுல் காந்தி விளாசல்..!

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமர் பேச்சு திருப்தியளிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக சாடியிருந்தார். மேலும் 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்ததாக கூறிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்பட்டதாகவும் கூறினார்.

மக்களவையில் பிரதமர் நிகழ்த்திய உரை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி; குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான பிரதமர் பேச்சு திருப்தியளிக்கவில்லை. அதானி நிறுவனங்கள் குறித்து விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிடாதது ஏன்? அதானிக்கு பிரதமர் மோடி நண்பர் அல்ல என்றால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது தானே? அதானி தனது நண்பர் இல்லையெனில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என பிரதமர் கூறியிருக்க வேண்டும். தொழிலதிபர் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் என்பது தெளிவாகிறது இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.