இந்தியா, ஜப்பானையும் குறிவைத்த சீன உளவு பலூன்கள்! அமெரிக்கா பரபரப்பு தகவல்


அமெரிக்கா மட்டுமின்றி, சீனா அதன் உளவு பலூன்கள் மூலம் இந்தியா, ஜப்பான் உட்பட பல நாடுகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நட்பு நாடுகளுக்கு விளக்கமளித்த அமெரிக்கா

அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு கரோலினா கடற்கரையில் ஒரு போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூனின் கண்டுபிடிப்புகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் இந்தியா உட்பட அதன் நட்பு நாடுகளுக்கு விளக்கமளித்துள்ளது.

துணை வெளியுறவு செயலாளர் வெண்டி ஷெர்மன், வாஷிங்டனில் உள்ள சுமார் 40 தூதரகங்களுக்கு ஆற்றிய உரையில், சீன கண்காணிப்பு பலூன், ஹைனான் மாகாணத்திற்கு வெளியே பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு, பல நாடுகளின் இராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஜப்பானையும் குறிவைத்த சீன உளவு பலூன்கள்! அமெரிக்கா பரபரப்பு தகவல் | Not Us Chinese Spy Balloons Target India JapanTyler Schlitt Photography

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள்

இந்த கண்காணிப்பு பலூன், ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சீனாவின் வளர்ந்து வரும் மூலோபாய ஆர்வமுள்ள நாடுகள் மற்றும் பகுதிகளில் உள்ள இராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம், அமெரிக்காவில் உள்ள அணுசக்தி ஏவுதளம் உள்ளிட்ட மூலோபாய இடங்களில் சீன உளவு பலூன் பறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தவிர, கடந்த சில ஆண்டுகளில் ஹவாய், புளோரிடா, டெக்சாஸ் மற்றும் குவாம் ஆகிய இடங்களில் குறைந்தது நான்கு பலூன்கள் காணப்பட்டன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.