
காமெடி படமாகும் இயக்குனரின் அனுபவங்கள்
'குபீர்' எனும் படத்தை இயக்கிய திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தில் திலீப்'. அவரே நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ராதாரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், பரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் திலீப் குமார் கூறும்போது “ திரைப்படப் படைப்பாளியாக உருவாக வேண்டும் என்ற தனது கனவை தொடர்ந்து துரத்தும் ஒரு எளிய மனிதனின் உண்மை கதை. நகைச்சுவையாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் யதார்த்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
இயக்குனர் திலீப் குமார் தான் வாய்ப்பு தேடிய அனுபவங்களை திரைக்கதையாக்கி உருவாக்கும் காமெடி படம் இது என்கிறார்கள்.