திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலின் நடை 12 ஆம் தேதி மாலை திறக்கப்படும் என கேரள தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து ஒருசில நாட்கள், பக்தர்கள் தரிசனத்துக்கும் அனுமதி வழங்கப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி மாலை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள தேவசம்போர்டு […]
