சென்னை: கோவை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத கல்குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பபான பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத […]
