திருச்சி சூர்யா கலாய்… அப்பா சொன்ன உப்புமா கதையும், பாஜக வெல்லும் சீக்ரெட்டும்!

இதென்ன இந்தியாவுக்கு வந்த சோதனை? ஒருபக்கம் பிரதமருக்கு மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையாகி உள்ளது. மறுபக்கம் அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுகள் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அனலை கிளப்பிவிட்டுள்ளது. இவை இரண்டும் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறி எதிர்க்கட்சிகள் தொண்டை வற்றும் அளவிற்கு கோஷங்கள் எழுப்பி வருகின்றன.

உப்புமா கதை

இத்தகைய பரபரப்பிற்கு இடையில் உப்புமா கதை ஒன்று வைரலாகி வருவது சற்று கடுப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. யார் சொன்னது? அதற்கு எதிர்வினை ஆற்றியது? என்பது தான் சற்று சுவாரஸியமான விஷயமாக மாறியுள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் ராஜ்ய சபாவில் பேசிய
திமுக
எம்.பி
திருச்சி சிவா
, பாஜகவை விமர்சித்து கூறிய உப்புமா கதை அக்கட்சியினரை கோபத்தில் ஆழ்த்தினாலும் ரசிக்க வைத்தது.

மாணவர்கள் கோரிக்கை

இதுதான் அந்த கதை. ஒரு கல்லூரி விடுதியில் தினசரி மாணவர்களுக்கு உப்புமாவை போடுகின்றனர். அதனை சகிக்க முடியாமல் விடுதி நிர்வாகத்திடம் முறையிடுகின்றனர். இதற்கிடையில் போராட்டத்தில் குதித்து விடுகின்றனர். இதையடுத்து நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்க என்ன உணவு வேண்டும் என வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதில்,

ஆம்லெட் – 7 சதவீதம்ஆளு பரோட்டா – 18 சதவீதம்பூரி – 13 சதவீதம்மசாலா தோசை – 20 சதவீதம்இட்லி – 19 சதவீதம்உப்புமா – 23 சதவீதம்

யாருக்கு வெற்றி

இறுதியில் உப்புமா வெற்றி பெற்று விடுகிறது. இப்படித்தான் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு கிடப்பதால் பாஜக வென்றுவிடுகிறது என திருச்சி சிவா கூறினார். இதை கிண்டல் செய்யும் வகையில் திருச்சி சிவாவின் மகனும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான திருச்சி சூர்யா ட்வீட் போட்டுள்ளார். அதில், உப்புமா கதை நன்றாக இருந்தது.

பிரெட் & ஆம்லெட் – வெஜிடேரியன்கள் தவிர்த்து விடுவர்பூரி – எண்ணெய் பதார்த்தம்ஆளு பரோட்டா – மைதா மற்றும் கொழுப்பு நிறைந்ததுமசாலா தோசை & இட்லி – கார்போஹைட்ரேட்

திருச்சி சூர்யா கலாய்

இதனால் மாணவர்கள் தவிர்த்திருப்பர். மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் உப்புமா மிகவும் ஆரோக்கியமானது என மாணவர்கள் புரிந்து கொண்டிருப்பர். எனவே சிறந்த உணவு உப்புமா தான். இந்த விஷயத்தில் தற்போது எந்தவித எதிர்ப்பும் ஏற்படவில்லை. மீண்டும் உப்புமாவே வெல்லும். உப்புமா தான் என்றைக்குமே எனப் பதிவிட்டுள்ளார். அதாவது பாஜகவை எதிர்க்க தற்போது யாருமில்லை. அடுத்து வரும் தேர்தலில் மட்டுமின்றி பாஜகவே எப்போதும் ஆட்சியில் இருக்கும் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.