காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவினால் காலித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
அந்தவகையில், தேர்தலில் பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றைக் கொடுப்பதை தடுக்கும் வகையில் நான்கு நிலை கண்காணிப்பு குழு, மூன்று பறக்கும் படை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கிருஷ்ணன்பாளையம் அருகே வைராபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உரிய அனுமதியின்றி அதிமுகவினர் ஆலோசனை நடத்துவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் படி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் அமைந்த தேர்தல் பறக்கும் படை கு மண்டபத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதற்க்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தேர்தல் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் அனுமதியின் கூட்டம் நடத்தியதற்காக மண்டபத்தில் இருந்த அதிமுக-வினரை வெளியேற்றிய விட்டு மண்டபத்தை இழுத்து மூடி சீல் வைத்தனர்.
அப்போது அதிமுகவினர் போலீஸ் அராஜகம்! போலீஸ் அராஜகம்! கோஷமிட்டு போலீசார் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.