அஜித் பாணியில் உதவிய அனில் கபூர்.. நடு வானில் நடந்த சுவாரஸ்யத்தை பகிர்ந்த பெண்!

விமானத்தில் நடிகர் அனில் கபூர்தான் ஆறுதலாக பேசினார் என Be Artsy நிறுவனர் ஷிக்கா மிட்டல் லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.

என்னை அறிந்தால் படத்தில் விமான பயண காட்சி ஒன்று வரும். அதில் பக்கத்து சீட்டில் பதட்டமான நிலையில் இருக்கும் அனுஷ்காவின் கையை பிடித்து அஜித் ஆறுதல் கூறும் வகையில் பேசுவார். அதே பாணியிலான நிகழ்வை எதிர்பாராத விதமாக பாலிவுட்டின் மூத்த நடிகரான அனில் கபூர் ஷிக்கா மிட்டலுக்கு செய்திருக்கிறார்.

ஷிக்கா மிட்டலும் அனில் கபூரும் ஒரே விமானத்தில் அருகருகே இருந்த இருக்கையில் பயணித்திருக்கிறார்கள். விமானம் பறக்க தொடங்கிய போது விமானம் குலுங்குவது போல இருந்ததால் தலைக்கு மேல் இருந்த லக்கேஜ் கேபின் லேசாக ஆடியிருக்கிறது. இதை கண்ட ஷிக்கா மிட்டலுக்கு சிறிது மன பதட்டம் (anxiety) ஏற்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட அனில் கபூர், ஷிக்காவுக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் அவரது ஆன்ஸைட்டியை குறைக்க “எதும் பதற வேண்டாம். உங்கள் பெயர் என்ன? நாம் பேசுவோம்” என பேச்சுக் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து இருவரும் இணைந்து ஆன்ஸைட்டி, பொருளாதார திட்டம், படங்கள், காஃபி என அடுத்தடுத்து பேசியிருக்கிறார்கள். இப்படியாக இருவரது விமான பயணமும் முடிந்திருக்கிறது.

இது குறித்த ஷிக்கர் மிட்டலின் பதிவில், “அந்த சமயத்தில் அவராக வந்து பேசியிருக்காவிட்டால் அவரிடம் நானும் பேசியே இருக்க மாட்டேன். ஆனால் அந்த இரண்டு மணிநேரம் நாங்கள் நிறைய மகிழ்வான விஷயங்கள் பற்றி பேசி சிரித்தோம். இது எதோ விமானம் புறப்பட்டதும் தரையிறங்கிய உணர்வையே கொடுத்தது.

தரையிறங்கிய பிறகு, “நிறைய பேர் ஆன்ஸைட்டி இருப்பது மோசமானது என சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு அதுதான் நாம் பேசுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இப்போ நீங்கள் டெல்லியில் எனக்கு காஃபி ட்ரீட் கொடுக்கலாம்.” என்று அனில் கபூர் கூறிவிட்டு அரவணைத்துவிட்டு சென்றார். அவர் ஒரு நல்ல நேர்மையான சக பயணியாக இருந்தார்.” என நெகிழ்ச்சி பொங்க பதிவிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.