ஈரோடு: அதிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்… ஏன்?

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அதிமுக-வுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்துகொள்ளவில்லை.
அதிமுக பிரசார கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது ஏன்..?
இது குறித்து பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் என்ன..?
விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
‘கமிஷன்… கலெக்ஷன்!’ – ஸ்டாலினுக்கு எதிராக கொதித்த எடப்பாடி!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் நடந்தது. கூட்டத்தில் வேட்பாளர் தென்னரசுவை அறிமுகம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க அரசு பொறுப்பேற்று 21 மாதங்களாகிவிட்டன. இதுவரை ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு துரும்பைக்கூட இந்த அரசு கிள்ளிப்போடவில்லை.
எங்கு பார்த்தாலும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு மட்டுமே இந்த ஆட்சியின் சாதனையாக இருக்கிறது. மக்களுக்காக எதையும் செய்யவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும் முதல்வர் ஸ்டாலினையும் எடப்பாடி கடுமையாக சாடினார். அவரது பேச்சை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
விகடனின் பொக்கிஷ தொடர்கள்: அனைத்தையும் ஒரே இடத்தில் படிக்கலாம்!

தலைசிறந்த ஆளுமைகள் முதல் சாமானிய மனிதர்கள் வரை எல்லாத் தரப்பு மக்களின் வாழ்வியலை, பண்பாட்டை, வரலாற்றைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஏராளமான தொடர்கள் விகடன் இதழில் வெளியாகி வாசகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து வருகின்றன.
விகடன் தொடர்கள் அனைத்தையும் இப்போது ஒரே இடத்தில் படிக்கலாம்!
இது குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
‘சவாரி ஆப்’ : தமிழகத்தில் எப்போது..?

ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற தனியார் ஆப்கள் கமிஷன் என்ற பெயரில் பெருமளவில் கொள்ளையடிக்கிறது என்பதே ஒட்டுநர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு.
இதற்குத் தீர்வாக கேரளாவில் அரசு சார்பாக ‘சவாரி ஆப்’ உருவாக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழகத்திலும் அரசு சார்பாக செயலி உருவாக்கப்படுமா? என்னும் கேள்வி எழுந்துள்ளது.
அப்படி தமிழகத்திலும் ‘சவாரி ஆப்’ அறிமுகப்படுத்தப்பட்டால் அதனால் பொதுமக்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன..?
விவரிக்கிறார் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) மாநில செயல் தலைவர் பால சுப்பிரமணியம்.
அதனைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
முருங்கை: தெரியாத விஷயங்கள்!

வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல, தமிழ்நாட்டில் காலம் காலமாக வீட்டுக்கு வீடு வளர்க்கப்பட்டு வரும் முருங்கை பற்றி நமக்குத் தெரியாததா? முருங்கையைப் பற்றிப் பேச பெரிதாக என்ன இருக்கிறது பலருக்கும் தோன்றலாம்.
நம் மண்ணின் பாரம்பர்ய பயிரான முருங்கையின் பயன்பாடு காலத்துக்கு ஏற்ப நவீன வடிவம் எடுத்துக்கொண்டே இருக்கிறது.
முருங்கை குறித்த நமக்கு தெரியாத மேலும் பல விஷயங்களை நம்முடன் பகிர்கிறார் முருங்கை ஆராய்ச்சி மற்றும் மதிப்புக்கூட்டல் நிறுவனத்தை நடத்தி வரும் முனைவர் எம்.நாச்சிமுத்து.
அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க…
ஆண்கள்தான் முதலில் காதலைச் சொல்ல வேண்டுமா?

ஆண் – பெண் இருவருமே காதல் வயப்படுகிறார்கள் என்றாலும் பெரும்பாலும் ஆண்களே காதலை முதலில் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பெண்ணைக் கவரும்படியாக பல்வேறு விதங்களில் ஆண்கள் தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர். தாமாக முன் வந்து காதலை வெளிப்படுத்துகிற பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ஆண்கள்தான் காதலை முதலில் சொல்ல் வேண்டும் என்றுதான் பெண்கள் விரும்புகிறார்களா என்பது இங்கு எழும் முக்கியக் கேள்வி.
ஆண்களே அதிக அளவில் காதலை வெளிப்படுத்த வேண்டிய சூழல் எதனால்..?
உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம், மானுடவியலாளர் மோகன் நுகுலா உள்ளிட்ட பலரது உரையாடலை விரிவாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க…
சினிமா விமர்சனம்: டாடா (Dada)

குழந்தையை ‘சிங்கிள் ஃபாதராக’ வளர்க்கப் போராடும் ஒரு தந்தையின் பாசமும், அதனால் அவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுமே இந்த ‘டாடா’ .
மொத்த படமுமே கவினின் தோள்களிலேயே பயணிக்கிறது. அந்தப் பணியை அசராமல் சிறப்பாகச் செய்திருக்கிறார். கவினுடன் அபர்ணா தாஸும் நடிப்பில் சம பலத்துடன் மோதுகிறார்.
வாழ்நாளில் எப்போது அழுதிடாத கவின், முதன் முதலாகக் கண் கலங்கும் இடம், அங்கிள் என்று அழைக்கும் பேரனிடம் பாக்யராஜ் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் இடம் எனப் பல நல்ல எமோஷனல் தருணங்களை ஓவர்டோஸ் இல்லாமல் இயல்பாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர்.