புதுடெல்லி: சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் சந்தீப் பூரி, “எரிபொருளின் சர்வதேச விலை பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு டன் எரிவாயு விலை 750 டாலராக உள்ளது.
சர்வதேச விலை குறைந்தால், இந்தியாவிலும் சமையல் எரிவாயு குறைந்த விலையில் விற்கப்படும். மக்களின் தேவையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க விடமாட்டோம்” என்றார்.