தர்ம சங்கடத்தில் முதல்வர் ஸ்டாலின்? இளம் கன்றுகளுக்கு உதயநிதி போட்ட கடிவாளம்!

ஆட்சியின் மீது தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே உதயநிதியை அமைச்சராக்கும் முடிவை தொடர்ந்து தள்ளிப் போட்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். ஒருவழியாக அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து முக்கிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எது நடக்க கூடாது என்று நினைத்தார்களோ அது நடப்பதற்கான அறிகுறிகள் தென்படவே சுதாரித்துக் கொண்டுள்ளது சித்தரஞ்சன் சாலை வட்டாரம்.

திமுகவை கட்டிக்காத்த கலைஞர் முடிவு!கட்சி, ஆட்சி இரண்டுக்கும் ஒரே தலைமை இருந்தால் மட்டுமே தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும் என்பது கலைஞர் ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னரே எடுத்த முடிவு. ஒருவகையில் அது சரியான முடிவாக இருந்ததாலேயே கட்சியை இவ்வளவு காலம் தொய்வு இல்லாமல் கொண்டு செல்ல முடிந்தது எனலாம். கலைஞரின் முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகவும், பின்னர் கட்சியின் செயல் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
திமுக கட்டுமானத்தை அசைக்க முயற்சி!இரு பவர் செண்டர்கள் உருவாகிவிட்டால் உள் மோதல்கள், கருத்து வேறுபாடுகள், சுணக்கங்கள் ஆகியவை அதிகரித்து கட்சியை, பின்னோக்கி சென்று விடும் என்பது தான் கலைஞரின் நிலைப்பாடாக இருந்தது. அதனாலே ஸ்டாலினுக்கு பதவிகள் கிடைப்பது தாமதமானது. ஸ்டாலினும் அதை உணர்ந்திருந்தார். அதனாலே தனது அமைச்சரவையில் உதயநிதிக்கு அவர் முதலில் இடமளிக்கவில்லை.
அழுத்தத்தால் எடுத்த முடிவா?குடும்பத்தில் இருந்து வந்த அழுத்தம், அமைச்சர்கள் வெளிப்படையாக உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு கேட்டது ஆகியவை காரணமாக ஸ்டாலின் தனது அமைச்சரவையில் உதயநிதிக்கு டிசம்பர் மாதம் இடம் அளித்தார். உதயநிதி அமைச்சரான பின்னர் அவர் கோட்டைக்கு வருவதைவிட அவரது இளைஞர் அணி நிர்வாகிகளின் தலைகள் தான் அதிகளவில் தென்படுகின்றன. அனைத்து துறைகளிலும் உதயநிதியின் பெயரை பயன்படுத்தி அடாவடியாக சில கோரிக்கைகளை வைப்பதாகவும் கூறுகிறார்கள்.
முதல்வருக்கு தர்ம சங்கடம்!ஜூனியர் அமைச்சர்கள் பய பக்தியோடு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க, சீனியர் அமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை உதயநிதியிடமும் கொண்டுபோய் சேர்த்துள்ளனர். இதுஒருபுறமிருக்க அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் போது உதயநிதியை போற்றி கோஷம் எழுப்பியுள்ளனர் சில இளைஞர் அணி நிர்வாகிகள். இது முதல்வருக்கும், உதயதிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாம்.
அடக்கி வாசிக்க உத்தரவு!இனியும் பொறுமை காப்பதில் பிரோயஜனமில்லை என்று உதயநிதி ஸ்டாலின் ​​

தனது இளைஞரணி நிர்வாகிகளை பிடித்து வெடித்து தள்ளியுள்ளார். ‘தலைவர் ஒருவர் தான்.. உங்கள் இருப்பை காட்ட வேண்டும் என்பதற்காக வெறுப்பை விதைத்துவிடாதீர்கள். எனது அனுமதி இல்லாமல் பிற அமைச்சர்களையோ, முதல்வரையோ சந்திக்க கூடாது. மாவட்டச் செயலாளர்களுடன் மோதல் போக்கில் ஈடுபடாமல் அடக்கி வாசியுங்கள்” என்று காட்டமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.