டெல்லி: பிப்ரவரி 14ஐ பசு அணைப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் கைவிட்டது. காதலர் தினத்தன்று பசு அணைப்பு தினம் கடைபிடிக்க விடுத்த அழைப்புக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. ஏராளமான விமர்சனங்கள், கண்டனங்களுடன் அறிவிப்பை ஏளனம் செய்யும் கருத்துகள் பதிவிடப்பட்டன. பசு அணைப்பு தின அறிவிப்புக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து அதை கைவிடுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.
