
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி மாற்றமா?
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆனால் நேற்றைய தினம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸ் செய்தியை ஆயுத பூஜைக்கு தள்ளி வைக்க பட குழு முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் தற்போது அந்த செய்தியை பொன்னியின் செல்வன் படக் குழு திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது.
பொன்னியின் செல்வன்- 2 படம் அறிவித்தபடி அதே தேதியில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். அதோடு இந்த மாதம் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் நிலையில், அடுத்த மாதம் முதல் வாரத்தில் டீசர், அதையடுத்து அடுத்த மாத இறுதியில் இசை வெளியீடு என அடுத்தடுத்து பிரமோசன் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனராம்.