வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நாக்பூர்: ஆஸி., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 177 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 327 ரன் எடுத்து 144 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 8வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த ஜடேஜா (66), அக்சர் (52) ஜோடி அவுட்டாகாமல் இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார்.

3ம் நாள் ஆட்டம் துவங்கியதும், ஜடேஜா 70 ரன்களுக்கும், அக்சர் படேல் 84 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 400 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸி., அணி சார்பில் டாட் முர்பி 7 விக்கெட்களை வீழ்த்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement