திருநெல்வேலி : 70 பவுன் கொள்ளை வழக்கில் விசிக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 500 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு முன் நெல்லை வழக்கறிஞர் ஒருவரின் வீட்டின் கதவை உடைத்து, 70 பவுன் கொள்ளை போனது.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து நெல்லை தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடிவந்த நிலையில், விசிக நெல்லை மாவட்ட நிர்வாகி ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவரிடமிருந்து 500 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ள போலீசார், தென்காசி, கடையநல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்களிடம், ஜெயக்குமார் திருட்டு நகைகளை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
500 பவுன் நகைகள் : பின்னணியில் விசிக கொள்ளை கும்பல்!#Nellai #Police #Crime #VCK #Thirumanavalavan #TNPolice #Politics #Chennai #Tamilnadu #Seithipunal pic.twitter.com/NjSxzUZPT1
— Seithi Punal (@seithipunal) February 11, 2023
இந்த கொள்ளை சம்பவங்களுக்கு பின்னணியில் விசிக்கவை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் பக்கபலமாக இருந்துள்ளார் என்பதும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரின் கரிசல்குளம் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ள தொடர்கொள்ளைச் சம்பவங்களில் இந்த விசிக கொள்ளை கூட்டத்திற்கு சம்மந்தம் உள்ளதாகவும், போலீசார் அவர்களை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.