தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே கரும்பனூரை சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் அருள்செல்வன். இவர் பூலாங்குளம் அருகே உள்ள மாதாபட்டினத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவர்கள் அனைவரும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அருள்செல்வனை பலமுறை எச்சரிக்கை விடுத்து அனுப்பியது. இருப்பினும் அவர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அருள்செல்வனை கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் சார்பில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் படி, போலீசார் நேற்று அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் படம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.