மகாராஷ்டிரா ஆளுநர் அரசியலில் இருந்தே விலகியது ஏன்.?

மகாராஷ்டிரா உள்பட மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று காலை உத்தரவு பிறப்பித்தார். அந்தவகையில் ஜார்கண்ட் ஆளுநராக இருந்த ரமேஷ் பாய்ஸ், தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரி திரும்ப பெறப்பட்டது சுவாரஸ்யமானது. அவுரங்கபாத்தில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மராத்தி ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஸ் சந்திரபோஸ் என கூறுவீர்கள். ஆனால் மராட்டியர்களான உங்களுக்கு பல லட்சிய மனிதர்கள் உள்ளனர்.

நீங்கள் அவர்களை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிர மாநிலத்தில் நீங்கள் அவர்களை காணலாம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார். பாபா சாகேப் அம்பேத்கர் முதல் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம்,” என தெரிவித்து இருந்தார்.

சத்ரபதி சிவாஜியை பழைய லட்சிய மனிதர் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதேபோல் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெறாவிட்டால், மாநிலம் தழுவிய போரட்டம் நடத்துவோம் என உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி அறிவித்தது. அதைத் தொடர்ந்து தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தாலும், மராத்தியர்களின் உணர்வுகளை களங்கப்படுத்தியதாக கூறி ஆளுநரை திரும்ப பெறக்கோரி கோரிக்கைகள் எழுந்து வந்தன.

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தான் அரசியலில் இருந்தே விலகுவதாக பிரதமரிடம் தெரிவித்தார். இது குறித்த அவர் கூறும்போது, ‘‘மகாராஷ்டிரா போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றுவது எனக்கு கிடைத்த மரியாதை மற்றும் பாக்கியம். புனிதர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் வீரம் மிக்க போராளிகளின் பூமி இது.

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மகாராஷ்டிர மாநில மக்களிடம் இருந்து நான் பெற்ற அன்பையும், பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. பிரதமர் நரேந்திர மோடி மும்பை வருகையின் போது, அனைத்து அரசியல் பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டு, எனது வாழ்நாள் முழுவதும் வாசிப்பு, எழுதுதல் மற்றும் பிற செயல்பாடுகளில் செலவிட வேண்டும் என்ற எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன்.

பரபரக்கும் திரிபுரா தேர்தல் களம்; எதிர்கட்சிகளை பொளந்து கட்டிய பிரதமர்.!

பிரதமரிடமிருந்து நான் எப்போதும் அன்பை மட்டுமே பெற்றிருக்கிறேன். இந்த விவகாரத்திலும் அதைப் பெறுவேன் என்று நம்புகிறேன்’’ என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தான் அவரது ராஜினாமா கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது ஆளுநர் மாற்றம் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.