லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் சூட்டிங் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இது தொடர்பான காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அவர் நடிக்கும் காட்சிகளை சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாரோ வீடியோ பதிவு செய்துள்ளனர். அதனை அவர்கள் இணையத்தில் பதிவிட்டவுடன், வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் கேங்ஸ்டர் லுக்கில் இருக்கும் விஜய் காட்சி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் வீடியோ எடுக்கப்படுவதை அறிந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடனடியாக வீடியோ எடுக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார். உடனடியாக வீடியோ எடுத்த நபர், வீடியோ பதிவை நிறுத்துகிறார். இருப்பினும், 8 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்தோ வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. விஜய் ரசிகர்களே இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். மேலும், விஜய் கேங்ஸ்டர் லுக்கில் மாஸாக இருப்பதாக தெரிவித்திருக்கும் ரசிகர்கள், படத்தின் வசூல் குறித்தெல்லாம் இப்போதே கதை கட்ட தொடங்கிவிட்டனர். இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டே, லியோ நிச்சயம் 500 கோடி கலெக்ஷன் பண்ணும் என இஷ்டத்துக்கு அடித்துவிடுகின்றனர். போதாக்குறைக்கு அஜித் ரசிகர்களையும் வம்புக்கு இழுக்கின்றனர்.
— Memeverse (@memeverse_offl) February 12, 2023
(இதுபோன்ற பல டிவிட்டர் பக்கங்களில் வீடியோக்கள் இருக்கின்றன)
இதனைப் பார்த்த அஜித் ரசிகர்களில் சிலர், படத்தின் லீக்கான காட்சியை நீங்களே ஷேர் செய்வது காமெடியாக இருக்கிறது என கிண்டலடித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, லியோ படக்குழு இணையத்தில் லீக்கான காட்சிகளை நீக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. டிவிட்டருக்கு ரிப்போர்ட் அடித்து லியோ சூட்டிங்ஸ்பாட்டில் விஜய் நடிக்கும் காட்சிகளையெல்லாம் நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பல டிவிட்டர் பக்கங்களில் பகிரப்பட்டிருப்பதால், அவையெல்லாம் நீக்கப்படுமா? என்பது கேள்வியாக எழுந்துள்ளது.