புடினிடம் அமைதிக்கான அறிகுறிகள் இல்லை! உக்ரைன் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா


உக்ரைன் மீது ரஷ்யா ஒரு பெரிய மற்றும் புதிய தாக்குதலை தொடங்கியுள்ளது என்று நோட்டோ தலைவர் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான அறிகுறிகள் இல்லை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமைதிக்குத் தயாராகி வருகிறார், என்பதற்கான “எந்த அறிகுறியும்” காணப்படவில்லை என திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் பார்ப்பது ஜனாதிபதி புடினும் ரஷ்யாவும் இன்னும் உக்ரைனைக் கட்டுப்படுத்த விரும்புவதை மட்டுமே.

புடினிடம் அமைதிக்கான அறிகுறிகள் இல்லை! உக்ரைன் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா | Nato Says New Russian Offensive Has Begun

அவர்கள் அதிக துருப்புக்கள், அதிக ஆயுதங்கள், அதிக திறன்களை எவ்வாறு உக்ரைனுக்கு அனுப்புகிறார் என்பதை நாங்கள் காண்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய தாக்குதல்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒராண்டை நிறைவடைய நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா ஒரு பெரிய புதிய தாக்குதலுக்கு தயாராகி வருகிறது.

உக்ரைன் வெற்றி பெறுவதற்கும் நியாயமான மற்றும் நிலையான அமைதியை அடைவதற்கும் தேவையானவற்றை நாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும், மேலும் இதனால் மேற்குலகம் ரஷ்யாவுடன் “தளவாடப் போட்டியில்” உள்ளது என்பது தெளிவாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

புடினிடம் அமைதிக்கான அறிகுறிகள் இல்லை! உக்ரைன் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா | Nato Says New Russian Offensive Has Begun

“உக்ரைனில் நடக்கும் போர் மிகப்பெரிய அளவிலான வெடிமருந்துகளை உட்கொள்கிறது, இது நமது பாதுகாப்பு தொழில்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது,” என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து பிரஸ்ஸல்ஸில் நாளை பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த இரண்டு நாள் கூட்டத்தில் உக்ரைனுக்கு விமானங்களை வழங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.