டெல்லி: 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர்கள், 100 நாள்வேலை திட்ட பயனாளர்கள் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் 14 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.6157 கோடி நிலுவையில் வைத்துள்ளது.
