திருமலை : காளஹஸ்தி சிவன் கோவிலுக்கு, சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, 5 திருக்குடைகளை நேற்று சமர்ப்பித்தார்.
ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான், திருச்சானுார் பத்மாவதி தாயார், காளஹஸ்தி சிவன், விஜயவாடா கனகதுர்க்கை அம்மன் உட்பட கோவில்களில், ஆண்டு முழுவதும் சுவாமி ஊர்வலத்தின்போது, சுவாமி மற்றும் தாயாரை அலங்கரிக்க தேவையான வெண்பட்டுக் குடைகள் மற்றும் திருக்குடைகளை, சென்னையை சேர்ந்த இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, பல ஆண்டுகளாக நன்கொடையாக சமர்ப்பித்து வருகிறார்.
காளஹஸ்தி சிவன் கோவில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம், நாளை (15ம் தேதி) துவங்கி 21 நாட்கள் நடக்கவுள்ளது. இதையொட்டி, இதன் பூர்வாங்க நிகழ்ச்சியான கண்ணப்பர் கோவில் கொடியேற்றம், நேற்று மாலை விமரிசையாக நடந்தது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 5 திருக்குடைகளை, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, காளஹஸ்தி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசலுவிடம் சமர்ப்பித்தார். காளஹஸ்தி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பாராவ், கோவில் அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement