பணத்துக்கும் பணத்துக்கும் போட்டி: எத்தனை தேர்தல் வந்தாலும் மாறுதல் வரவில்லை – சீமான்

எத்தனை தேர்தல் வந்தாலும் மாறுதல் வரவில்லை. இப்போதுள்ள கட்சிகளால் மாற்றம் வரப்போவதில்லை, புரட்சியால் மட்டுமே மாற்றம் வரும் என நாம் தமிழர் கட்சியின் ;தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடு:ம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேரித்தார். அப்போது பேசிய அவர்…
திமுக, அதிமுக, கூட்டணி கட்சிகளோடு போட்டியிடுகிறது.. கொள்கைக்காக அவர்கள் போட்டி போடவில்லை. பணத்துக்கும் பணத்துக்கும் இங்கு போட்டி நடக்கிறது நேர்மையாக அரசியல் செய்ய நாங்கள் நினைக்கிறோம் ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்தால் ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் மாற்றம் வரும்.
image
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு வந்துள்ளார்கள். ஆனால், எங்கள் பக்கம் மக்கள் நிற்கிறார்கள் திமுக அதிமுக வென்றது. ஆனால், .மக்கள் தோற்றுப் போனார்கள் நல்லாட்சியை கொடுத்திருந்தால் ஏன் வாக்குக்கு மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுக்கடை திறந்துள்ளது படிக்க வைத்தவர் காமராஜர், குடிக்க வைத்தது திமுக தேர்தலில் போட்டி பணத்திற்கும் இனத்திற்கும் தான் திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியில் கொள்ளைதான் நடக்கிறது. இப்போதைய ஆட்சியாளர்களால் கச்சத்தீவை மீட்க முடியாது.
திருப்பூரில் அடிக்கும் வெளி மாநிலத்தவர் இனி தெரு தெருவிற்கு அடிப்பார்கள் நான் வென்றால் பல பேரை கொன்று விடுவேன். வாக்காளர் அடையாள அட்டையை வைத்து பணம் கொடுக்கிறார்கள். முதலியார் சமூக மக்களை சாதியத்தை வைத்தும் பணம் கொடுத்தும் அவர்கள் வாக்குகளை பெற முடியாது. வென்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
image
காசு கொடுப்பதால் வெற்று நாற்காலியை பார்த்து பேச வேண்டிய நிலை ஆகிவிட்டது. மதுக்கடையால் இரவிலும் குடிக்கிறார்கள், காலையிலும் குடிக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகயும் வாக்குறுதி கொடுத்ததை போல் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை இஸ்லாமிய மக்களுக்கு ஒரு நன்மையும் திமுக செய்யவில்லை.
நூறுநாள் வேலை திட்டத்து செல்பவர்களும், அதானி அம்பானியும் செலுத்துவது ஒரே வரி தான். சாராயம் உற்பத்தி செய்பவர்கள் லட்சாதிபதிகளாக இருக்கிற்ரார்கள். உணவளிப்பவர்கள் பிச்சைக்காரர்களாக இறக்கிறார்கள் என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.