திருவண்ணாமலையில் அரங்கேறிய ஏடிஎம் மைய கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சார்பில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அரியானா மாநிலத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்பொழுது வரை கொள்ளையர்கள் பிடிப்படவில்லை. மேலும் இந்த கொள்ளையர்கள் குறித்தான எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் தமிழக போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வங்கி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களை கண்காணிக்க மறைமுக கேமராக்களை பொருத்த வேண்டும். முகத்தை அடையாளம் காணும் வகையில் மென்பொருள் அடங்கிய கேமராக்களை அனைத்து ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும்.
அதேபோன்று ஏடிஎம் இயந்திரங்களை உடைக்கும் பொழுது அலாரம் ஒலி ஏடிஎம் மையங்களிலும் அருகில் உள்ள காவல் நிலையங்களிலும் ஒலிக்குமாறு அமைக்க வேண்டும் போன்ற அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழே டிஜிபி சைனாந்திர பாபு உடன் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.