பெர்ஹாம்பூர், ஒடிசாவில் புதுமண தம்பதி, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, டிராக்டர் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த பிரணிதா, 22, ஆந்திராவின் ஹிச்சாபுரத்தைச் சேர்ந்த பெனு, 27, இருவருக்கும் கடந்த 11ல் ஆந்திராவில் திருமணம் நடந்தது. பின் இருவரும் ஒடிசாவில் உள்ள மணப்பெண்ணின் வீட்டிற்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் மோதியது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, டிராக்டர் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement