வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பெட்ரோல் ரூ272க்கும், டீசல் விலை ரூ 280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ஏற்கெனவே கடும் பொருளாதாரச் சிக்கலில் தவித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், சமையஸ் காஸ் விலையை வரலாறு காணாத அளவு உயர்த்துள்ளது. அதேபோல் உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களான பால், இறைச்சி ஆகியவற்றின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டது. பால் ஒரு லிட்டர் ரூ.210க்கு விற்கப்படுகிறது, கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.700-800 வரை உயர்ந்துவிட்டது.

பெட்ரோல் விலை ரூ272க்கும், டீசல் விலை ரூ 280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மண்ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு 12.90 ரூபாய் அதிகரித்து ஒரு லிட்டர் 202.73 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இந்த விலைவாசி உயர்வை தாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பால், இறைச்சி போன்ற உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காத உயர்வை கண்டுள்ளதால் மக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement