தமிழகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட IAS அதிகாரி திடீர் மரணம்!


சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர்

ஈரோடு மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியராக பணியாற்றியவர் கதிரவன் (55). இவர் தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், இன்று காலை சென்னையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட கதிரவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை கவனித்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட IAS அதிகாரி திடீர் மரணம்! | Namakkal Ias Officer Sudden Death In Chennai

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

முதல்வர் இரங்கல்

அவரது இறப்பு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடல்நலக்குறைவு காரணமாக கதிரவன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி மற்றும் வேதனையடைந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.