திருமணத்துக்கு தயாரான நட்சத்திரா, சிவா வைத்த செக்மேட் – கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்தி ரூமில் இருக்க அங்கு வரும் அபிராமி ‘அவசர அவசரமா கல்யாணம் என்பதால் கவலைப்படுறீயா’ என கேட்க அதெல்லாம் ‘ஒன்றும் இல்லம்மா’ என கார்த்தி, அபிராமியை சமாதானம் செய்கிறான்.

அடுத்து அபிராமி ரூமில் இருந்து வெளியே கிளம்பும்போது மறைந்து இருந்த தீபாவின் கை பட்டு ஷோ ப்ளவர் ஒன்று கீழே விழுந்து உடைய எலி தள்ளி விட்டதாக சொல்லி சமாளித்து வெளியே அனுப்புகிறான்.

மறுபக்கம் நட்சத்திரா, கார்த்தியுடன் கல்யாணத்துக்கு உற்சாகமாக தயாராக, அப்போது வரும் சிவா முக்கியமான விஷயம் என சொல்லி அவளை வெளியே அழைத்துச் சென்று மலேசியாவிற்கு விசா எடுக்கும் வேளையில் ஈடுபடுகிறான்.

image

இந்த பக்கம் ராஜ ஸ்ரீ, ஐஸ்வர்யாவுக்கு போன் பண்ண அப்போது ஐஸ்வர்யா, ‘அபிராமி அவசர அவசரமாக நட்சத்திராவுடன் கல்யாணம் செய்ய ஏற்பாடு’ செய்வதாக சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். மேலும் ‘கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன், ரூபஸ்ரீயை, கார்த்திக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என வாக்கு கொடுக்கிறாள்.

எல்லாரும் தயாராகி காத்துக் கொண்டிருக்க நட்சத்திரா இல்லாத காரணத்தினால் அபிராமி அவளுக்கு போன் போட்டு சீக்கிரம் வர சொல்ல நட்சத்திரா, சிவாவுக்கு தெரியாமல் எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறாள்.

இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? என்பதை அறிய ‘கார்த்திகை தீபம்’ சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.