Vaathi: பொறுமையை சோதிக்கிறது… வாத்தி படத்தில் உள்ள நெகட்டிவ்ஸ்..

வாத்தி படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை ஒரு பக்கம் பெற்று வரும் நிலையில் அதன் நெகட்டிவ் விமர்சனமும் வெளியாகி வருகிறது.

தனுஷ்நடிகர் தனுஷ் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் வாத்தி என்ற பெயரிலும் தெலுங்கில் சார் என்ற பெயரிலும் வெளியாகியுள்ளது. நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
​ தனுஷை பிரிந்த பிறகு ஆளே மாறிப்போன ஐஸ்வர்யா!​
ஆசிரியர்இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், சாய் குமார உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கல்வி வியாபாரமாக்கப்படுவதை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ் பாலமுருகன் என்ற ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
​ Adjustment in Tamil cinema: படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள்… மவுனம் கலைக்கும் முன்னணி நடிகைள்… அதிர்ச்சியில் கோலிவுட்!​
பாஸிட்டிவ் விமர்சனங்கள்பிரிவியூ ஷோவை பார்த்து விமர்சகர்கள் பாஸிட்டிவான விமர்சனங்களை கூறி வந்த நிலையில் இன்று காலை படம் ரிலீஸ் ஆனது முதல் ரசிகர்களும் பாஸிட்டிவான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். வாத்தி படம் பல இடங்களில் தங்களின் வாழ்க்கையில் கனெக்ட் ஆகிறது என்றும் பல காட்சிகள் எமோஷனலாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
​ Bakasuran: பகாசுரன் படத்தில் உள்ள மைனஸ் இதுதான்… புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!​
நெகட்டிவ்படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் கிடைப்பது படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அதேநேரம் படத்தில் உள்ள சில நெகட்டிவ் விஷயங்களும் பூதாகரமாகியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அப்ளாஸை அள்ளி வரும் நிலையில் கதையின் அடுத்த நகர்வை முன்கூட்டியே யூகிக்க முடிவதாக தெரிவித்துள்ளனர்.
​ Ajith, AK 62: அஜித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? வாயை பிளக்க வைக்கும் ஒரு காரின் விலை!​
பொறுமையை சோதிக்கிறதுபடம் ஸ்லோவாக செல்வதாகவும் முதல் பாதியில் பல இடங்களில் பொறுமையை சோதிப்பதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன. மேலும் தேவையில்லாத இடங்களில் எல்லாம் பிஜிஎம்மை போட்டு அலற விட்டுள்ளார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இருப்பினும் படம் நிஜ வாழ்க்கையில் கனெக்ட் ஆகியிருப்பதால் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் என்றும் சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.
​ அதுக்குள்ளேயே அந்த முடிவை எடுத்த ரஜினிகாந்த்!​
Dhanush

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.