AK62: எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்..ஆரம்பமாகும் AK62..வெளியான தரமான அப்டேட்..!

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. வினோத் மற்றும் அஜித்தின் கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இவர்கள் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு படத்தின் வெற்றி அதை ஈடு செய்யுள்ளது. இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் அஜித் தன் அடுத்த பட வேலைகளை துவங்க ஆயத்தமானார்.

Vaathi: மூன்று நாட்களில் வாத்தி படம் செய்த மொத்த வசூல்..அடேங்கப்பா..!

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்தார். கடந்தாண்டே இப்படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் இப்படத்திற்கான கதையை தயார் செய்யும் பணியில் இறங்கினார்.

இதையடுத்து ஜனவரி மாதம் AK62 படப்பிடிப்பு துவங்குவதாக இருந்த நிலையில் திடீரென இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். விக்னேஷ் சிவனின் கதையில் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மகிழ் திருமேனி தான் அஜித்தின் AK62 படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இருப்பினும் இதைப்பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அதற்கு காரணம் அஜித் இப்படத்திற்காக மகிழ் திருமேனியிடம் பல கண்டிஷன்களை வைத்துள்ளாராம்.மேலும் கதையிலும் சில மாற்றங்களை அஜித் செய்ய வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த கண்டிஷன்களுக்கு எல்லாம் ஓகே சொன்ன மகிழ் திருமேனி கதையையும் அஜித்திற்கு ஏற்றாற்போல மாற்றியுள்ளார்.

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி ஐந்தே மாதங்களில் முடிக்கப்படவுள்ளதாம். மேலும் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாவதும் உறுதியாகிவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அஜித் மற்றும் மகிழ் திருமேனி இணையும் AK62 திரைப்படத்தின் அறிவிப்பு இந்த வாரம் அநேகமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.