சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக துறைத் தலைவர்களுடன் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் ஆலோசனை மேற்கொண்டார். உழவர் நலத்துறை செயலாளர், துறை தலைவர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் குறித்து கருத்துக்களை பெற தலைமைச்செயலர் அறிவுரை வழங்கினார்.
