Mayilsamy: மயில்சாமியின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா? தீயாய் பரவும் தகவல்!

மறைந்த நடிகர் மயில்சாமியின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நெஞ்சை பிடித்தப்படிபிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மரணமடைந்தார். சனிக்கிழமை மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவெல்லாம் கண் விழித்த நடிகர் மயில்சாமி, அதிகாலை வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த டீக்கடையில் டீ குடித்த மயில்சாமி, நெஞ்சை பிடித்தப்படியே சரிந்துள்ளார். ​ நோ… ஐஸ்வர்யாவுக்கு ரஜினி போட்ட ஆர்டர்!​
கண்ணீர் அஞ்சலிஇதையடுத்து ஆட்டோ மூலம் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் மயில்சாமி. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட உடலுக்கு தமிழ் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
​Ajith, Ak 62: ஏகே 62 படத்தில் அஜித்தை புரட்டி எடுக்கப்போவது இவர்தானாம்!​
உடல் தகனம்நேற்று பகல் வரை பொதுமக்களும் சினிமாத்துறையினரும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தீவிர சிவபக்தரான மயில்சாமியின் உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட மயில்சாமியின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின் மயானத்தில் இறுதிச் சடங்கிற்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.
​Mayilsamy: டீக்கடையிலேயே மாரடைப்பு.. மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட மயில்சாமி.. திடுக் தகவல்!​
2 வீடுகள்அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மயில்சாமியின் சொத்து விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மறைந்த நடிகர் மயில்சாமிக்கு சென்னையில் 2 வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சொந்தமாக 2 ஹோட்டல்களும் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
​ Mayilsamy: மயில்சாமி மரணம்.. கதறி அழுத எம்எஸ் பாஸ்கர்.. கடைசி வரை நகரவில்லை.. கலங்க வைத்த நட்பு!​
5 கார்கள்2019 ஆம் ஆண்டின் படி மயில்சாமியின் சொத்து மதிப்பு 18 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவை அனைத்துமே மயில்சாமியின் கணக்கில் உள்ள சொத்துக்கள் என்றும் கூறப்படுகிறது. இதைத்தவிர நடிகர் மயில்சாமியிடம் 5 கார்கள் மற்றும் 7 பைக்குகள் உள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால் இதுதான் மயில்சாமியின் சொத்துக்கள் என இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
​ Mayilsamy: அன்பே கடவுள் இல்லத்தில் இருந்து விடைபெற்றார் மயில்சாமி.. உடல் தகனம்.. கதறி அழுத மகன்கள்!​
மகன்களும் நடிகர்கள்சினிமாவில் சிறுக சிறுக சம்பாதித்த பணத்தில் தனது இரு மகன்களையும் படிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையை செட்டில் செய்துள்ளார் மயில்சாமி. மயில்சாமியின் மகன்கள் இருவருமே சினிமாவில் நடிகர்களாக உள்ளனர். மயில்சாமி தனக்கு வரும் வருமானத்தில், பெரும்பாலான தொகையை உதவி என்று வருபவர்களுக்கே அளித்துள்ளார்.
​ ‘மன்னிப்பு கேட்க நினைத்தேன்’ ரஜினிக்கு தீராத குற்ற உணர்ச்சியை கொடுத்த மயில்சாமி…​
30 ஆண்டுகளாக சினிமாவில்..அசையா சொத்துக்களாய் இருந்ததால் கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் உதவி செய்து வந்துள்ளார் மயில்சாமி. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் மயில்சாமி, ஏராளமான குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல குரல் மன்னனான மயில்சாமி வெளிநாடுகளிலும் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
​ Mayilsamy: மயில்சாமிக்கு கிடைத்த பாக்கியம்… அண்ணாமலையார் கோவிலில் இருந்து வந்த இறுதி மரியாதை… ரசிகர்கள் உருக்கம்!​
Mayilsamy

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.