லால்குடி அருகே 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி லால்குடி அருகே உள்ள நான்கு கிராமங்களில் மார்ச் 8 முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லால்குடி அடுத்த மங்கம்மாள்புரம், ஜங்கமா ராஜபுரம், கீழன்பில், அன்பில் ஆகிய நான்கு கிராமங்களில் வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேற்கண்ட இந்த நான்கு கிராமங்களில் மோதல் ஏற்படும் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜங்கம ராஜாபுரம் ஆச்சிரம வள்ளி அம்மன் கோவில் மாசி தேர் திருவிழா நடத்தவும், வருவாய் கோட்டாட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆச்சிரம வள்ளி அம்மன் கோவில் மாசி தேர் திருவிழா நடத்துவதில் பல்வேறு தரப்புகளிடம் கருத்து வேறுபாடு இருப்பதால், மோதல் உண்டாகலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.