புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டு வர கோரிய மனுக்கள் மீது நாளை முக்கிய தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில், சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்’ எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகின. இவற்றை சமீபத்தில் விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு, ‘தேர்தல் கமிஷனர்கள் நியமன டைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த நியமனங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தும் குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் இடம் பெற வேண்டும். அப்படி அவர் இடம் பெற்றால், வெளிப்படை தன்மை உருவாகும்’ என்று தெரிவித்து உள்ளது.
இந்த வழக்கில் (மார்ச்.02) முக்கிய உத்தரவு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement