இந்தூர்: இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக கவாஜா 60, லபுஷேன் 31, ஸ்மித் 26, கிரீன் 21 ரன்கள் சேர்த்தனர்.
