'ப்ளீஸ் போகாதீங்க'… நடையை கட்டும் வட மாநில தொழிலாளிகள்.. வருந்தும் முதலாளிகள்.!

உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தவர் கோவையில் உள்ள பஞ்சலைகளைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணி என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வட மாநில தொழிலாளர்களை இந்தி பேசியதற்காக உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதாக போலியான வீடியோ ஒன்றை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இந்த பிரச்சினை இரு மாநில அளவில் பெரிதாக வெடித்துள்ளது. கோவை நீதிமன்ற வளாகம் அருகே நடந்த கொலை பதிவான வீடியோவை பகிர்ந்து வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரப்பி வந்தனர்.

அதை நம்பி பிகார் நியூஸ் தொலைக்காட்சியிலும் செய்தி வெளியானது. இதுகுறித்து தமிழக காவல்துறை உரிய விளக்கம் அளித்ததோடு வட மாநில தொழிலாளர்களுக்காக ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்பாலைகள் சங்கத்தினர்

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்களை நம்பி தங்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி படையெடுத்து செல்ல துவங்கியுள்ளனர் என்று நூற்பாலைகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவையில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பஞ்சாலை தொழிற்சாலைகளில் 60% வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இதனால் தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு தங்களது தொழிற்சாலைகளில் அனைத்து விதமான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகள் உள்ளதாக தெரிவித்த அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என இந்தி மொழியில் பேசி வட மாநிலத்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் வட மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் துவங்கப்படுவதால் இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லவார்கள் என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.