முடிசூட்டுவிழாவிற்கு முன் அரசுமுறைப்பயணமாக வெளிநாடு செல்லும் மன்னர் சார்லஸ்: எந்த நாட்டுக்கு தெரியுமா?


மன்னர் சார்லஸ், மகாராணியாரின் மறைவுக்குப் பின் முதன்முறையாக அரசுமுறைப்பயணமாக வெளிநாடு செல்கிறார்.


எந்தெந்த நாடுகளுக்குப் பயணம்?

மன்னர் சார்லசும் ராணி கமீலாவும், இம்மாதம் 26ஆம் திகதி பாரீஸ் செல்கிறார்கள். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானை சந்திக்கும் மன்னரும் ராணியும் பிரான்சிலுள்ள ஆர்கானிக் திராட்சத்தோட்டங்களைப் பார்வையிட இருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து, ஜேர்மனிக்குச் செல்லும் மன்னரும் ராணியும், ஜேர்மன் ஜனாதிபதியான Frank-Walter Steinmeierஐச் சந்திக்கிறார்கள்.

முடிசூட்டுவிழாவிற்கு முன் அரசுமுறைப்பயணமாக வெளிநாடு செல்லும் மன்னர் சார்லஸ்: எந்த நாட்டுக்கு தெரியுமா? | State Tour Before Coronationwhich Country Knows


Credit: AFP

அதன் பின் ஜேர்மன் ஃபெடரல் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் மன்னரும் ராணியும் பசுமை ஆற்றல் குறித்த விடயங்கள் குறித்து அறிந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்த சந்திப்பு, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியுடனான பிரித்தானியாவின் உறவைக் கொண்டாடுவதுடன், நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் கொள்கைகளை அடையாளப்படுத்தும் விதத்தில் அமையும் என அரண்மனை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

முடிசூட்டுவிழாவிற்கு முன் அரசுமுறைப்பயணமாக வெளிநாடு செல்லும் மன்னர் சார்லஸ்: எந்த நாட்டுக்கு தெரியுமா? | State Tour Before Coronationwhich Country Knows

Credit: AFP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.