சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில், உதவி மையம் திறக்கப்பட்டு உள்ளது. அதில், கடந்த 2 நாளில் 219 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, வட மாநிலங்களுக்கு திரும்பும் தொழிலாளர்கள், ஹோலி கொண்டா ஊருக்கு போறோம், திரும்பி வருவோம் என கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக 2 விடியோக்கள் பரவி வைரலானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பீகார் […]