ஜல்கான்: இந்தியாவில் 2 கோடி பெண்கள் உடல் பருமனுடனும், 98 லட்சம் ஆண்கள் உடல் பருமனுடன் இருப்பதாக மகாராஷ்டிரா அமைச்சர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த உடல் பருமன் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், ‘உடல் பருமனே பல நோய்களுக்கும் மூல காரணமாக உள்ளது.
இந்தியாவில் 98 லட்சம் ஆண்களும், 2 கோடி பெண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயை தடுக்க, சரியான உணவு பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். முறையான உடற்பயிற்சி அவசியம். சிறு வயது முதலே, குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, இனிப்புகளை விரும்பி சாப்பிடுவது, ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, உணவில் கார்போஹைட்ரேட், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது.
அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடுவது; 14 கிலோ மீட்டர் தூரம் ஓடுவது; ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம்’ என்றார்.