
கோடம்பாக்கத்தில் அலுவலகம் திறந்த தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்
தமிழ் திரையுலகில் துணை நடிகராக இருந்து வரும் பி.எல்.தேனப்பன், ‛ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். 1998ல் கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் வெளியான ‛காதலா! காதலா!' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து ‛பம்மல் கே. சம்மந்தம், பஞ்சதந்திரம், திவான், பிரியசகி, வல்லவன், துரை, அய்யனார், பேரன்பு' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை புதிதாக திறந்துள்ளார். அலுவலக திறப்பு விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பங்கேற்று வாழ்த்தினார்.