கடந்த ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், 23ஆம் தேதி கோவை இந்து கோவில் அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஜமேஷா முபின் என்பவன் உடல் கருகி உயிரிழந்தார்.
மேலும் அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்கு உண்டான அனைத்து ஆதாரங்களும் அவன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.

அடுத்த சம்பவமாக நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம், மங்களூர் பகுதியில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்து இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தென்மாநிலங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு, கோவை கார் வெடிப்பு ஆகிய இரு சம்பவங்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
இதுகுறித்த அவர்களின் அறிக்கையில், எங்கள் மதத்தின் மரியாதைக்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். பாஜக மற்றும் இந்திய ராணுவமும் எண்கள் எதிரிகள்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய தென் இந்தியாவில் எங்கள் முஜாகிதீன்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது” என்று பொஐங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர்.