AK62: அந்த விஷயத்தில் மட்டும் அஜித்திடம் உஷாராக இருக்க வேண்டும்..பிரபல இயக்குனர் பளிச்..!

அஜித்
அல்டிமேட் ஆசை நாயகன், அல்டிமேட், தல என பல புனைபெயர்களை கொண்ட அஜித் எனக்கு எந்த பெயரும் வேண்டாம், அஜித் என்று அழைத்தால் போதும் என்ற முடிவிற்கு வந்தார். இதுமட்டுமல்லாமல் பல தைரியமான எந்த நடிகர்களும் எடுக்க யோசிக்கும் முடிவுகளை அஜித் தன் திரைவாழ்க்கையில் எடுத்துள்ளார். தன்னம்பிக்கைக்கு பெயர்போன அஜித் நடிப்பில் சமீபத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வலிமை சொதப்பியதால் துணிவு படத்தை வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் அஜித். அதற்கு ஏற்றாற்போல துணிவு படமும் எதிர்பார்த்த வெற்றியை தந்து அஜித்திற்கு புது உத்வேகத்தை அளித்தது. இதன் காரணமாக தற்போது பரபரப்பாக தன் அடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றார் அஜித்.

குழப்பம் அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தான் தன் 62 ஆவது திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால் என்ன நடந்ததோ என்று தெரியவில்லை திடீரென விக்னேஷ் சிவனை படத்திலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டனர். இதற்கு காரணம் விக்னேஷ் சிவனின் கதை அஜித் மற்றும் லைக்காவிற்கு பிடிக்கவில்லை என்கின்றனர். கதை பிடிக்கவில்லை என்றால் கதையை மாற்றாமல் இயக்குனரை மாற்றியது எந்த விதத்தில் நியாயம் என ஒரு தரப்பு கூறி வருகின்றது. மேலும் அஜித் செய்தது தான் சரி, படம் வெளியாகி பின்பு வருத்தப்படுவதை விட முன்கூட்டிய தைரியமாக முடிவெடுத்துள்ளனர் என்கின்றனர் சிலர். இந்நிலையில் மறுபக்கம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தன் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். ஆனாலும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றளவும் வெளியாகாமல் இருப்பது அஜித் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

நம்பிக்கை அஜித் என்னதான் விக்னேஷ் சிவன் மீது நம்பிக்கை இல்லாமல் அவரை படத்திலிருந்து நீக்கினாலும் இதற்கு முன் பல இயக்குனர்களின் மீது நம்பிக்கை வைத்து தன்னை ஒப்படைத்துள்ளார் அஜித். சரண், சிறுத்தை சிவா, வினோத் என அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களாக பலர் இருக்கையில் பல புதுமுக இயக்குனர்களுக்கும் தைரியமாக வாய்பளித்துள்ளார் அஜித். அதில் ஒரு இயக்குனர் தான் சரவணன் சுப்பையா. அஜித்தை வைத்து சிட்டிசன் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் தான் சரவணன் சுப்பையா. தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வரும் இவரின் முதல் படம் தான் சிட்டிசன். அன்றைய காலகட்டத்திலேயே அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட சிட்டிசன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று அஜித்திற்கு புரட்சிகரமான நடிகர் என்ற அங்கீகாரத்தையும் கொடுத்தது
அஜித்துடன் பைக் ரைட் இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித்துடன் சிட்டிசன் படத்தில் பணியாற்றியதை பற்றியும், சிட்டிசன் படப்பிடிப்பில் அஜித்துடன் பைக் ரைட் சென்றதை பற்றியும் பேசியுள்ளார் சரவணன் சுப்பையா. அவர் பேசியதாவது, ஒரு நாள் சிட்டிசன் படப்பிடின்போது அஜித் என்னுடன் பைக்கில் வா போலாம் என் அழைத்தார். நானும் அஜித் சொன்னாரே என்பதற்காக அந்த புல்லட் பைக்கில் ஏறினேன். புல்லட் பைக்கை அஜித் ஜெட் வேகத்தில் ஓட்டினார். பின்னாடி நான் பதட்டத்துடன் உட்கார்ந்து வந்தேன். எப்போடா பைக்கை நிறுத்துவார், நாம் இறங்கலாம் என பீதியில் இருந்தேன். அந்த அளவிற்கு பைக்கை புயல் வேகத்தில் ஓட்டுவார் அஜித். எனவே அஜித் பைக்கில் கூப்புடுகிறார் என்றால் நாம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என அன்றைக்கு உணர்ந்தேன் . இருந்தாலும் அந்த நிகழ்வுகள் எல்லாம் என்னால் மறக்கமுடியாத அனுபவங்களாக இருக்கின்றது என்றார் சரவணன் சுப்பையா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.