கரு நாகராஜன்: நீங்க கடல்னா, நாங்க இந்து மகா பெருங்கடல்… அதிமுகவிற்கு பாஜக பதில்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் அளித்த பேட்டி அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக தரப்பில் இருந்து எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு, ஜெயலலிதா உடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றெல்லாம் பதிலடி கொடுத்தார்.

மக்கள் கையில் தீர்ப்பு

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் அவர்களிடம் ’சமயம் தமிழ்’ சார்பில் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், திராவிட கட்சிகளை தாண்டி வளர முடியாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்? மக்கள் தான் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.

வாக்கு சதவீதம் குறைவு

மக்கள் சொல்லக் கூடிய முடிவு தான் இறுதியானது. பல தொகுதிகளில் 50 முதல் 55 சதவீதம் வரை தான் வாக்குகளே பதிவாகின்றன. 45 சதவீதம் பேர் வாக்களிக்கவே வருவதில்லை. இதற்கு உதாரணமாக சென்னையில் உள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகளை கூறலாம். இதையெல்லாம் செல்லூர் ராஜூ போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது. வாய்க்கொழுப்பு, நாவடக்கம் தேவை என ஏதேதோ பேசியிருக்கிறார்.

அண்ணாமலை ஒரு தலைவர்

முதலில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியை செல்லூர் ராஜூ காது கொடுத்து கேட்டாரா? மதுரையில் தான் பேட்டியே கொடுக்கிறார்.

தாயார் மறைவை ஒட்டி ஆறுதல் கூறச் செல்லும் போது அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். அதில், தன்னை ஒரு தலைவர் எனக் கூறுகிறார். எம்.ஜி.ஆர் போல, ஜெயலலிதா அம்மையார் போல ஆளுமை. ஒரு கட்சியின் தலைவர்.

பாஜக தயங்காது

அவரே தான் சொல்கிறார். ஜெயலலிதா அளவிற்கு நான் புகழ்பெற்றவன் கிடையாது. ஒரு கட்சி தலைவர் எப்படி முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அவர்கள் அனைவரும் உதாரணம். அதைப் போல நானும் முடிவுகளை எடுப்பேன் என்று பேசினார். இதைக் கூட சரியாக கேட்டு புரிந்து கொள்ளவில்லை. இதெல்லாம் தவறு. பாஜக ஒன்றும் தயங்கிக் கொண்டு உட்காரக்கூடிய கட்சி கிடையாது.

இந்து மகா பெருங்கடல்

இது வந்து கடல். இந்த கடலில் கல்லை போட்டால் கல் தான் காணாமல் போகும் என்கின்றனர். அவர்கள் ஒரு குறுங்கடல். நாங்கள் இந்து மகா பெருங்கடல். இதை அனைவரும் புரிந்து கொள்ள மாட்டோம். கடந்த வாரம் வரை கூட்டணி தொடரும் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது இப்படியெல்லாம் பேசுவது தவறு என்று கூறினார். எந்த ஒரு முடிவையும் ஏற்பதற்கும், சந்திப்பதற்கும் பாஜக தயாராகவே இருக்கிறது.

தலைமை கண்டிக்குமா?

எங்களுக்கு தேசம் தான் முதலில். அதன்பிறகு கட்சி, பின்னர் தான் குடும்பம். கட்சி தலைவருக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். அவர் எடுக்கும் முடிவுகளின் படி செயல்படக் கூடியவர்கள் என்று தெரிவித்தார். அதிமுக தலைவர்கள் இப்படி பேசுவதற்கு அதன் தலைமை இதுவரை கண்டிக்கவில்லையே என்ற கேள்விக்கு, இது ஒன்றிரண்டு நாட்களில் எடுக்கக் கூடிய முடிவல்ல. இன்றைய தினம்

தலைமையில் கூட்டத்தை கூட்டுகின்றனர். பார்க்கலாம். என்ன முடிவுகளை எடுக்கப் போகிறார்கள் என கரு நாகராஜன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.