சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு| Compulsory retirement of underperforming officials

சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை, ராஜ்யசபாவுக்கும் பரவியுள்ளது. முதல்கட்டமாக ராஜ்யசபா செயலகத்தில் பணியாற்றும், 67 ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்தது முதல், மத்திய அரசு அதிகாரிகளின் பணி சூழல் மாறியு உள்ளது.ஒழுங்காக வேலை செய்யாதவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.கடந்த, 2019 நவ.,ல் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், குரூப் ஏ எனப்படும், 96 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

கடந்தாண்டு பார்லிமென்டில் அளித்த பதிலில், முந்தைய ஐந்து ஆண்டுகளில், 1,083 ஊழியர்கள் சரியாக பணியாற்றாததால் பணி நீக்கம் செய்யப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராஜ்யசபா செயலகத்திலும் ஆள்குறைப்பு நடவடிக்கை துவங்கியுள்ளது. இங்கு பணியாற்றும், 1,400 பேரில், 70 சதவீதம் பேரின் சேவை தேவையில்லை என்று கணிக்கப்பட்டது.இதையடுத்து, 1,௦௦௦ பேரை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக பணியாளர்களின் பணித் திறன், அவர்களுடைய செயல்பாடுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. இதில், முதல்கட்டமாக சரியாக செயல்படாத, ௬௭ பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர், 50 வயதுக்கு மேற்பட்டோர் அல்லது, 30ஆண்டுகள் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.